உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்கள் விவரம் வெளியானது

57

2022 (2023) ஆண்டில் உயர்தரப் பரீட்சையில், காலி ரிச்மண்ட் கல்லூரி சமுதிதா நயனப்ரியா பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இதேவேளை, கொழும்பு சிறிமாவோ மகளிர் கல்லூரியைச் சேர்ந்த தில்சராணி தருஷிகா என்ற மாணவி வர்த்தகப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி உயிரியல் பிரிவில் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் பஷானி முனசிங்க என்ற மாணவி முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

இதேவேளை, கொழும்பு றோயல் கல்லூரியில், பௌதீகவியல் பிரிவில் கோனதுவகே மனெத் பானுல பெரேரா முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

Join Our WhatsApp Group