ஆபிரிக்க காலநிலை மாநாடு : ருவன் விஜேவர்தன,எகிப்து பிரதமருடன் சந்திப்பு

23

கென்யாவின் நைரோப் நகரத்தில் நடைபெற்றுவரும் ஆபிரிக்க காலநிலை தொடர்பான மாநாட்டில் (Africa Climate Summit 2023) பங்கேற்கச் சென்றிருக்கும் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, எகிப்து பிரதமர் முஸ்தபா மெட்பௌலியை சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய ருவன் விஜேவர்தன குறித்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.

எகிப்து பிரதமர் மற்றும் ருவன் விஜேவர்தன ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்ளும் இயலுமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அதேபோல் காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்காக இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பிலும் எகிப்து ஜனாதிபதியை ருவன் விஜேவர்தன தெளிவுபடுத்தினார்.

அதேபோல் இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கனா கனநாதனும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
05.09.2023

Join Our WhatsApp Group