“முகமது சாலா 2024இல் சவுதி அரேபியாவிலுள்ள காற்பந்து அணிக்கு மாறலாம்”

19

கோல் மன்னன் முகமது சாலாவை (Mohamed Salah) லிவர்பூல் (Liverpool) காற்பந்து அணி இப்போதைக்கு விட்டுக்கொடுப்பதாக இல்லை.கடந்த வாரம் இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் ஆட்டக்காரர்களை வாங்கும் – விற்கும் கால அவகாசம் முடிய சில மணி நேரங்களே எஞ்சியிருந்தபோது,சாலாவை வாங்க சவுதி அணியான அல்-இத்திஹாட் (Al-Ittihad) முன்வைத்த அழைப்புத் தொகையை லிவர்பூல் நிராகரித்தது.

இதற்குப் பின்னரும் சாலாவுக்காக வரும் எந்தவோர் அழைப்புத் தொகையையும் நிராகரிப்பதில், லிவர்பூல் உறுதியாக இருக்கும் என்றே தாம் நம்புவதாக அணிப் பயிற்றுவிப்பாளர் யூகன் க்ளோப் (Jurgen Klopp) கூறியுள்ளார்.

சாலாவை விட்டுக்கொடுத்தால் அவரது இடத்தை மற்றோர் ஆட்டக்காரர் கொண்டு நிரப்புவது கடினம் என்று அவர் கருதுகிறார்.சாலா இந்தப் பருவம் முழுவதும் லிவர்பூலுக்காக விளையாடி விட்டு, 2024ஆம் ஆண்டு அணி மாறலாம் என்று தமக்குத் தோன்றுவதாகக் க்ளோப் சொன்னார்.லிவர்பூலில் சாலாவின் ஒப்பந்தம் முடிய இன்னும் 24 மாதங்களுக்கும் குறைவாகவே உள்ளது.

Join Our WhatsApp Group