மலேசியாவில் sarongஐ அணிந்துகொண்டு ஓடிய மக்கள்!

27

மலேசியாவில் மக்கள் sarongஐ அணிந்துகொண்டு ஓடியது இதுவே முதல் முறை. “மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க ஓடியதோடு, அவர்களது புத்தாக்கச் சிந்தனையைப் பயன்படுத்தி எப்படி sarongஐ அணிந்துகொண்டு ஓடலாம் எனச் சுவாரசியமாகச் சிந்தித்திருக்கின்றனர்.”மலேசியாவின் பேராக்கில் (Perak) சுமார் 400 பேர் sarongஐ அணிந்துகொண்டு ‘Sarong Run’ ஓட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பலர் அதில் பங்கெடுத்ததாக The Star செய்தி நிறுவனம் தெரிவித்தது.அவர்கள் வண்ணமயமான sarongஐ இடுப்பில் கட்டிக்கொண்டோ தலைப்பாகையாகப் பயன்படுத்தியோ 6 கிலோமீட்டர் தூரம் வரை ஓடினர்.பேராக்கில் ‘Sarong Run’ ஓட்டம் நடைபெற்றது இதுவே முதன்முறை.

மலேசியாவின் தேசிய தினத்தை ஒட்டி, ஒரு மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன் ஒருபகுதியாக, இந்த வண்ணமயமான நிகழ்ச்சி இடம்பெற்றது.இன்றைய நவீன காலத்திலும் மலேசியர்கள் கலாசாரப் பண்புகளையும் பாரம்பரிய ஆடைகளையும் மதித்துப் போற்றுகின்றனர் என்பதை நிகழ்ச்சியின் வெற்றி புலப்படுத்தியதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

Join Our WhatsApp Group