மறைந்த எலிசபெத் அரசியாரைக் கௌரவிக்கத் திட்டமிடும் பிரிட்டிஷ் அரசாங்கம்

17

மறைந்த எலிசபெத் அரசியாரை, மேலும் பல வழிகளில் கௌரவிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் திட்டமிடுகிறது.அவருக்கு நிரந்தர நினைவகத்தை அமைப்பதோடு தேசிய அளவில் அவரைப் பெருமையோடு நினைவுகூரும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தவிருப்பதாக அரசாங்கம் (3 செப்டம்பர்) தெரிவித்தது.

2026ஆம் ஆண்டில் அவற்றை அறிமுகம் செய்யவிருப்பதாக பிரிட்டன் கூறியது.எலிசபெத் அரசியார், உயிரோடு இருந்திருந்தால், தமது 100ஆவது பிறந்தநாளை 2026இல் கொண்டாடியிருப்பார்.அவர் கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம், 96 வயதில் மாண்டார்.

எலிசபெத் அரசியார் 70 ஆண்டுகாலமாக அரசியாராகப் பதவி வகித்தார்.”எதிர்கால தலைமுறையினருக்கு எலிசபெத் அரசியார்தேசத்துக்கு ஆற்றிய பெரும் பங்களிப்பை எடுத்துக்காட்டுவது சவால்மிக்க ஒன்றாக அமையும்,” என்று அவரது முன்னாள் அந்தரங்கச் செயலாளர் கூறியிருந்தார்.

Join Our WhatsApp Group