மக்கள் தேர்தலுக்கு தயாராக இல்லை-மைத்திரிபால சிறிசேன

13

மக்களில் 60 வீதமானவர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை இதுவரை தீர்மானிக்கவில்லை. அவர்களை எப்படி சுதந்திரக்கட்சியை நோக்கி ஈர்ப்பது என்ற சவால் எமக்குள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை துரிதமாக நவீனமயப்படுத்த உள்ளதாகவும் பொய்யான தகவல்களை முன்வைத்து கடமைகளை செய்யாத கட்சியின் அமைப்பாளர்கள் சம்பந்தமாக நிறைவேற்றுக்குழுவை கூட்டி முடிவு ஒன்றை எடுக்க உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்துள்ளார்.

ஜயவர்தனபுர இம்பீரியல் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 72 வது ஆண்டு மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வரலாற்றில் இருந்தே இலகுவான பயணத்தை தேற்கொள்ளவில்லை. ஆரம்பத்தில் இருந்து இதுவரை கட்சி நெருக்கடிகளையும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்துள்ளது.

அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. எனினும் மக்கள் தேர்தலுக்கு தயாராக இல்லை. கட்சிகளுக்கு நெருக்கமானவர்கள் மாத்திரமே அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களில் 60 வீதமானவர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை இதுவரை தீர்மானிக்கவில்லை. அவர்களை எப்படி சுதந்திரக்கட்சியை நோக்கி ஈர்ப்பது என்ற சவால் எமக்குள்ளது.

மாற்றத்தை செய்ய நாம் தயாராக வேண்டும். இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்னுதாரணத்தை வழங்கியுள்ளது.

எமது கட்சியை துரித நவீனமயப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும். இதற்காக மத்திய செயற்குழு குழு ஒன்றை நியமித்துள்ளது.

சில தொகுதி அமைப்பாளர்கள் தமது தொகுதிகளில் கடமைகளை செய்வதில்லை. காகிதங்களில் பொய்களை எழுதி கட்சியின் தலைமையகத்திற்கு அனுப்புகின்றனர்.

இது குறித்து மாத இறுதியில் கட்சியின் நிறைவேற்றுக்குழுவை கூட்டி கலந்துரையாடுவோம்.

தொகுதி அமைப்பாளர்கள் இறப்பு வீடுகளுக்கு, திருமண வீடுகளுக்கு செல்வதில்லை. இறப்பு வீடுகளுக்கு செல்வது சிறந்த நடவடிக்கை.

எமது கட்சியினர் இறப்பு வீடுகளுக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

திருமணங்களுக்கு மாத்திரம் கோட்,சூட் அணிந்து செல்லாமல், இறப்பு வீடுகளுக்கு செல்லுமாறுbh அமைப்பாளர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

Join Our WhatsApp Group