படகில் சென்று தமிழகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானம்

17

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து இந்தியாவுக்கு படகு மூலம் சென்று கலந்துரையாடலில் ஈடுபடப்போவதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் தமிழகத்துக்கு 14 பேர் கொண்ட மீனவர் குழு படகு மூலம் சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக ஆளுநர் ரவி, தமிழக பாஜக தலைவர் கு.அண்ணாமலை ஆகியோரை சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளனர்.

கடந்த முதலாம் திகதி இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாண மாவட்ட செயலாளரிடம் மகஜரொன்றை கையளித்ததாக குறித்த சம்மேளனத்தின் தலைவர் புனித பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த மகஜர் கையளித்து 14 நாட்களுக்குள் இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடில் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்த நிலையிலேயே குறித்த முடிவை எட்டியதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் புனித பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group