கிரீஸில் காட்டுத் தீயை அணைக்கக் கை கொடுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

15

கிரீஸில் காட்டுத் தீயை அணைக்க 12 விமானங்கள், 60 வாகனங்கள் ஆகியவற்றுடன் தீயணைப்பாளர்கள் 400 பேரையும் ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பி வைத்துள்ளது.கிரீஸில் முன்னெப்போதும் காணாத அளவில், காட்டுத் தீ பற்றியெரிகிறது.ஐரோப்பிய ஒன்றியம், பல்வேறு முனைகளிலிருந்து நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்துள்ளது.

வெளியிலிருந்து உதவிகள் கிடைத்தபோதும் கிரீஸ் தீயணைப்பாளர்கள் இரண்டு வாரமாய் பற்றியெரியும் நெருப்பைக் கட்டுக்குள் கொண்டு வரச் சிரமப்படுகின்றனர்.காட்டுத் தீயில் சிக்கி, 20 பேர் மாண்டனர்.அவர்கள் எல்லை தாண்டி கிரீஸுக்குள் செல்ல முயன்ற குடியேறிகள் என்று கூறப்படுகிறது. மாண்டோரின் உடல்களை அடையாளம் காணும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

துருக்கியே எல்லையை ஒட்டிய காட்டுப் பகுதிக்குள் சிக்கியிருந்த மேலும் 25 குடியேறிகளைத் தீயணைப்பாளர்கள் பத்திரமாய் மீட்டனர்.அவர்களில் சிலர் சிரியா, ஈராக், லெபனான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். எவரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை.கிரீஸின் வடகிழக்குப் பகுதியில் 81,000 ஹெக்டருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு நெருப்பில் பொசுங்கிப்போனது.காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்பு மேலும் தொடரலாம் என்று அஞ்சப்படுகிறது.

Join Our WhatsApp Group