கண்டி மாநகர எசல பெரஹெரா காலத்தில்சுமார் 250 தொன் குப்பைகள் சேகரிப்பு

13

கண்டி மாநகர சபையின் கழிவு முகாமைத்துவ பிரிவினால் எசல பெரஹெரா காலத்தில் கண்டி நகரில் இருந்து சுமார் 250 தொன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஓகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பமான எசல பெரஹரா உற்சவம் 31 ஆம் திகதி வரை நடைபெற்றது.

இதன்போது, பத்து நாட்கள் வீதி உலா உற்சவம் இடம்பெற்று கடந்தவாரம் நிறைவு பெற்றது.

இந்நிலையில், குறித்த காலப்பகுதியில் கண்டி மாநகர சபையின் பணியாளர்கள் 250 தொன் குப்பைகளை சேகரித்துள்ளனர்.

பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் உள்ளிட்ட சுமார் 50 டன் திடக்கழிவுகள் அவற்றில் உள்ளடங்குகின்றன.

மேலும், எஞ்சிய உணவுப் பொருட்கள், விளையாட்டு பொம்மைகள், யானைகளின் சாணம், மரத்தடிகள் போன்ற பல்வேறு பொருட்கள் காணப்பட்டன.

குறித்த பிரதேசங்களில் குப்பைகளை அகற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், ஒரு சிலரே தங்களின் கோரிக்கைகளுக்கு இணங்கியதாக கண்டி மாநகர சபையின் கழிவு முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்தனர்.

Join Our WhatsApp Group