எம்பிலிபிட்டியவில்5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து :ஒருவர் உயிரிழப்பு*

15

எம்பிலிபிட்டிய – கல்வங்குவ பிரதேசத்தில் வேன் விபத்துக்குள்ளானதில் 73 வயதான ஒருவர் உயிரிழந்தது மேலும் நால்வர் படுகாயமடைந்தனர்.

குறித்த வேன் மேலும் 5 வாகனங்களை மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த வேன் 3 முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றுமொரு வேனுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், விபத்துக்கு காரணமான வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தின் போது அவர் மதுபோதையில் இருந்தமை பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group