இம்மாத இறுதியில், சினோபெக் நாடு முழுவதும் செயல்படத் தொடங்கும்

18

செப்டெம்பர் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் சந்தை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய சுத்திகரிப்பு நிலையத்தில் முதலீடு செய்வதற்கான தனது நோக்கத்தை தொடர்ந்து அமுல்படுத்துவதாகவும், அதற்கான திட்ட முன்மொழிவை அடுத்த வாரத்திற்குள் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது..

சினோபெக் நிறுவனத்தின் இலங்கை எரிபொருள் விநியோக நிறுவனம் மற்றும் சினோபெக் சுத்திகரிப்பு நிறுவனத்தின் அதிகாரிகளுடன் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளின் முன்னேற்றம், எரிபொருள் நிரப்பு நிலைய விநியோக முகவர்களுடனான ஒப்பந்தத்தின் முன்னேற்றம், சினோபெக் வர்த்தக நாம செயற்பாடுகள் மற்றும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள சந்தை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான முன்னேற்றம் குறித்து கலந்துரையாடினர்.

Join Our WhatsApp Group