ஆசியா கிண்ணம் போட்டு 2023 : நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

21

இந்திய அணிக்கும் நேபாள அணிக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணியின் தலைவா் ரோகித் சர்மா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளார். 

இந்த போட்டியில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு முக்கியத்துவமாக அமைந்துள்ளது.

ஏற்கனவே இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வீதம் வழங்கப்பட்டது.

 “ஏ” குழுவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாள அணிகள் உள்ளதுடன், அந்த குழுவில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் வெற்றிப்பெற்று முன்னிலையில் உள்ளது.

பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் நேபாள அணி தோல்வியை தழுவியுள்ள நிலையில், இந்திய அணி இதுவரை எந்த போட்டியிலும் வெற்றிப்பெறவில்லை.

எனவே இன்றைய போட்டி இந்திய அணிக்கு தீர்மானமிக்கதாக அமைந்துள்ளது.

Join Our WhatsApp Group