வடக்கில் தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றம் :இருமடங்காக அதிகரித்த சிங்கள, முஸ்லிம் குடித்தொகை

20

போருக்கு பின்னரான 14 ஆண்டுகளில் வடக்கின் குடிப்பரம்பலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்பட்டுள்ளன. சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களின் குடித்தொகை இரண்டு மடங்கால் வடக்கில் அதிகரிதுள்ளமை மாவட்ட செயலகங்களில் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டம் ஊடாக தகவல் ஒன்று பெறப்பட்டுள்ளது.

போர் முடிந்த பின் 2010 ஆம் ஆண்டில் வடக்கின் 5 மாவட்டங்களிலுமாக 10 இலட்சத்து 35 ஆயிரத்து 89 தமிழர்களும், 34 ஆயிரத்து 376 முஸ்லிம்களும், 17 ஆயிரத்து 830 சிங்களவரும் வசித்துள்ளனர். ஆனால் 2022 ஆம் ஆண்டு இறுதியில் 11 இலட்சத்து 16 ஆயிரத்து 260 தமிழர்களும், 89 ஆயிரத்து 620 முஸ்லிம்களும், 33 ஆயிரத்து 33 ஆயிரத்து 835 சிங்களவர்களுமாக அந்தக் குடிப்பரம்பல் மாற்றமடைந்துள்ளது.

தமிழர்களின் எண்ணிக்கை 14 ஆண்டுகளில் 81 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது. முஸ்லிம்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 251 பேரால் அதிகரித்துள்ளது. சிங்களவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 5 ஆக அதிகரித்துள்ளது.

வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைத்து அரசாங்கம் திட்டமிட்டு குடியேற்றங்களை மேற்கொண்டு வருவதாக தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group