பிரிட்டனில் ஆபத்தான கட்டிடத்தில் செயல்படும் 150 பள்ளிகள் மூடல்

28

பிரிட்டனில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த வாரம் பள்ளிகள் தொடங்க உள்ளன.இந்தநிலையில் அங்கு பெரும்பாலான பள்ளிகள் ஆபத்தான கான்கிரீட் கட்டிடத்தில் செயல்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனையடுத்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் செயல்படும் 150 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

எனவே கல்வி பாதிக்கப்படாமல் இருக்க வேறு இடங்களில் அப்பள்ளிகள் செயல்படுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் பள்ளிக்கல்வித்துறை மந்திரி கில்லியன் கீகன் கூறினார்.

Join Our WhatsApp Group