நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62,000 ஐ தாண்டியுள்ளது

20

நாட்டில் இதுவரையில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62,000ஐத் தாண்டியுள்ளது.

கடந்த எட்டு மாதங்களில் இதுவரை 62,029 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சில வாரங்களில் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும், நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும் கடும் மழையுடன் மீண்டும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் மழை பதிவாகியுள்ளது.

மேல் மாகாணத்தில் மாத்திரம் 30,271 டெங்கு நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பல பிரதேசங்களை டெங்கு அபாய வலயங்களாக அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ள போதிலும் சுகாதார அதிகாரிகள் நாடு முழுவதும் பல விழிப்புணர்வு மற்றும் டெங்கு ஒழிப்பு திட்டங்களைத் தொடங்கியுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை விரிவுப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group