ஐக்கிய நாடுகளின் 78ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

25

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் 78ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துக்கொள்ளவுள்ளார்.

அதன்படி, குறித்த கூட்டம் எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதி முதல் செப்டம்பர் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் 78ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து உரையாற்றவுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதியன்று பன்முகத்தன்மை கொண்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும், நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலில் முன்னேற்றத்தை முன்னேற்றுவதற்கான வழிகளைத் தேடவும் இந்த மாநாடு உலகளாவிய தலைவர்களை ஒன்றிணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்காக நியூயார்க் செல்வதற்கு முன், எதிர்வரும் செப்டம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கியூபாவின் ஹவானாவில் நடைபெறும் G77 உச்சிமாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group