இத்தாலியில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல கரடி – மக்கள் கொந்தளிப்பு

31

இத்தாலியில் பிரபலமாக உள்ள கரடி ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டதை அந்நாட்டு அரசியல்வாதிகளும் வனவிலங்கு நிபுணர்களும் கண்டித்துள்ளனர்.

அமரேனா (Amarena) என்று பெயரிடப்பட்டிருந்த அந்தக் கரடி மத்திய இத்தாலியில் உள்ள அப்ருஸ்ஸோ (Abruzzo) தேசியப் பூங்காவின் பிரபலமான விலங்குகளில் ஒன்று.அது அழிந்துபோகும் அபாயத்தை எதிர்நோக்கும் மார்சிகன் பழுப்பு (Marsican brown) நிறக் கரடி வகையைச் சேர்ந்தது என்றது The Guardian செய்தி நிறுவனம்.

அதை 56 வயது ஆடவர் ஒருவர் சுட்டுக் கொன்றதாக நம்பப்படுகிறது.அமரேனா கரடி தமக்குச் சொந்தமான பகுதிக்குள் நுழைந்ததால் பயத்தில் அதைச் சுட்டதாக அந்த ஆடவர் காவல்துறையிடம் கூறியதாய்ச் சந்தேகிக்கப்படுகிறது.கரடியைச் சுட்டதை நியாயப்படுத்தவே முடியாது எனப் பூங்கா அதிகாரிகள் கூறினர்.அதன் குட்டிகள் என்னவாகின என்பது தெரியவில்லை.ஆளில்லா வானூர்திகள் கொண்டு அவை தேடப்படுவதாக The Guardian குறிப்பிட்டது.

Join Our WhatsApp Group