இடால்யா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

35

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) இடால்யா (Idalia) சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பிடவும், மக்களுக்கு ஆறுதல் கூறவும் ஃபுளோரிடா (Florida) சென்றுள்ளார்.

அமெரிக்க மத்திய அரசாங்க அதிகாரிகள், ஃபுளோரிடா மாநில அதிகாரிகள், நிவாரணப் பணிகளை முன்னின்று நடத்தியோர் ஆகியோர் திரு. பைடனுக்கு நிலவரம் குறித்து விளக்கமளித்தனர்.இந்த வாரத் தொடக்கத்தில் இடால்யா சூறாவளி, ஃபுளோரிடாவைப் புரட்டிப் போட்டது.6000க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.

குறைந்தது ஒருவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.அதிபர் பைடன், ஃபுளோரிடா சென்றுள்ள வேளையில், மாநில ஆளுநர் ரோன் டிசெண்டிஸ் (Ron DeSantis) அவரைச் சந்திக்கவில்லை.அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில்குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட முயல்கிறார் திரு. ரோன் டிசெண்டிஸ்.ஃபுளோரிடா மாநிலத்தில் மறுசீரமைப்புப் பணிகளுக்குக் கூடுதல் உதவிகள் வழங்கப்படும் என்று திரு. பைடன் உறுதியளித்துள்ளார்.

Join Our WhatsApp Group