வீட்டில் திருட முற்பட்டவன் மரத்தில் இருந்து வீழ்ந்து வைத்தியசாலையில் அனுமதி

17

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவிலுள்ள புதூரில் திருடன் ஒருவன் அவனது பக்கத்து வீட்டின் கூரையை கழற்றி வீட்டில் திருடச் சென்ற நிலையில் திருடனை கண்டு வீட்டில் உள்ளவர்கள் சத்தமிட்டதையடுத்து திருடன் அங்கிருந்து தப்பி ஓடுவதற்காக அருகிலுள்ள வீட்டின் கூரை மீது பாய்ந்துள்ளான். இந்த நிலையில் நிலை தடுமாறி கீழே விழுந்த திருடனின் கால்கள் முறிந்துள்ளன.
அவரை அந்த இடத்திலேயே பிடித்த பொதுமக்கள், ஆஸ்பத்திரியில் அனுமதித்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை (31) மாலையில் இடம்பெற்றுள்ளது.

புதூர் 3ம் குறுக்கு எல்லை வீதியிலுள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் குழந்தை களை வீட்டில் விட்டுவிட்டு அருகிலுள்ள வீட்டிற்கு சம்பவதினம் மாலை 3.30 மணியளவில் சென்றுள்ளார். இந்த நிலையில் வீட்டின் கூரையை திருடன் ஒருவன் கழற்றுவதை கண்டு சத்தமிட்டதையடுத்து திருடன் கூரையில் இருந்து அருகிலுள்ள மரத்தின் பாய்ந்து ஏறி ஒழித்துக் கொண்டான்.

இந்த நிலையில் திருடனை பிடிப்பதற்காக அயலவர்கள் ஒன்றினைந்த தையடுத்து திருடன் அங்கிருந்து தப்பி ஓடுவதற்காக அருகிலுள் வீட்டின் கூரைக்கு பாய்ந்து தப்பிக்க முயற்சித்த போது கீழே விழுந்துள்ளார். இந்த நிலையில் கால் இரண்டாக உடைந்துள்ளதையடுத்து.
இதனையடுத்து அவனை பிடித்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.

Join Our WhatsApp Group