வட, கிழக்கில் நனோ தொழிநுட்ப முறையில் தண்ணீர் சுத்திகரிப்பு

31

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக துரித இடைக்கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு முறைகளை நிறுவவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அவற்றில் பெரும்பாலானவைகளின் பணிகள் பூர்த்திசெய்யப்பட்டு வருகின்றன.

சிறுநீரக நோயாளிகள் அதிகமாக உள்ள பிரதேசங்களுக்கு இந்த நனோ தொழிநுட்ப நீர் சுத்திகரிப்பின் முறைகள் பயன்படுத்தப்படுகின்றது என நீர் வளங்கள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘கொவிட் 19 நோய்த் தொற்று மற்றும் உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பின்னடைவினால் நாம் முதலில் தயாரித்த திட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இருபினும் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த வேலைத்திட்டங்களின் மூலம் நாடு மீண்டும் பொருளாதார உறுதிப்பாட்டை அடைந்து வருவதன் காரணமாக படிப்படியாக அந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடிந்துள்ளது.

தற்போது நாட்டின் குடிநீர் தேவையில் 62 சதவீதத்தை நிறைவு செய்துள்ளது.

பல பிரதேசங்களில் மக்கள் நீர் வழங்கல் அமைச்சினால் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீருக்கு பதிலாக பல்வேறு மாற்றுக் குடிநீர் மூலங்கள் ஊடக தமது குடிநீர் தேவையை நிவர்த்தி செய்து கொள்வதன் காரணமாக நாட்டின் மொத்த குடிநீர் தேவையில் 85 சதவீதத்தை நாம் நிறைவு செய்தல் நாட்டின் குடிநீர் தேவையை முழுமையாக நிவர்த்தி செய்யலாம்.

மேலும் கடந்த காலங்களில் தேசிய நீர் வழங்கல் அமைச்சு என்ற வகையில் கிராமங்களுக்கே சென்று மக்களின் தண்ணீர் தேவை தொடர்பில் ஆராய்ந்து பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலமே இந்த 62 சதவீத அடைவை எட்டியது’ என நீர் வளங்கள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group