ரஜினியை நேரில் சந்தித்த ஓ.பன்னீர் செல்வம்

35

நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது.

இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினி. இவர் பல டாப் இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார். தன் நடிப்பினாலும், ஸ்டைலினாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த ரஜினியை ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி மற்றும் நெல்சனுக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கார்- காசோலைகளை பரிசாக வழங்கினார்.

இந்நிலையில், நடிகர் ரஜினியை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நேரில் சென்று சந்தித்தார். சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

Join Our WhatsApp Group