மழைக் கால நிலை தீவிரம் :7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

37

தீவு முழுவதும் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, தீவின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழை காலநிலை தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Join Our WhatsApp Group