பெரு நாட்டிலும் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

27

பெரு நாட்டின் மக்கா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி.
பூமிக்கு அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்.
பெரு நாட்டின் சான் ஃபெர்ணான்டோவில் இருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மக்கா பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோளில் இந்த நிலநடுக்கம் 5.3 ஆக பதிவாகி இருக்கிறது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் பத்து கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Join Our WhatsApp Group