கொள்ளை கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு – தென் ஆப்பிரிக்காவில் 18 பேர் சுட்டுக் கொலை

18

தென் ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை மறித்து பணத்தைக் கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மீது கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர்.இந்த துப்பாக்கிச் சூட்டில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த 16 ஆண்கள், 2 பெண்கள் உள்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Join Our WhatsApp Group