எரிபொருள் விலை அதிகரிப்பின் பின்னணியில் அரசின் சூழ்ச்சி – சம்பிக்க குற்றச்சாட்டு

21

விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில், வரி விதித்து மக்களை ஒடுக்குவதே அரசின் ஒரே நோக்கம் என்றார். ஒவ்வொரு லீற்றர் எரிபொருளுக்கும் 150 ரூபாவுக்கும் அதிகமான வரி விதிக்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு இல்லை என சுட்டிக்காட்டிய அவர் டொலரின் பெறுமதியும் மாறவில்லை என வலியுறுத்தினார்.

இவ்வாறான பின்னணியில் எந்த சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த மாதம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 60 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.

Join Our WhatsApp Group