ஆசியக்கிண்ண தொடர் : இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

39

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கட் தொடரின் மூன்றாவது போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் இந்தியா அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்ளளவுள்ளது.

இந்த போட்டியானது கண்டியில் உள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நண்பகல் மூன்று மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டி இரு அணி வீரர்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் களம் காண்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்திய அணியில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு பலமாக இருந்தாலும் சில முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து திரும்பி இருக்கிறார்கள்.

மேலும் பந்துவீச்சில் முகமது சமி, பும்ரா ஆகியோர் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் வெற்றியுடன் இந்திய அணி தொடரை தொடங்கும் உத்வேகத்தில் உள்ளது.

பாகிஸ்தான் அணி பொறுத்தவரை துடுப்பாட்டத்தில் முதல் நான்கு வீரர்களும் வேகப் பந்துவீச்சு மற்றும் சுழற் பந்து வீச்சும் பலமாக உள்ளது.

மேலும், பாகிஸ்தான் அணியானது 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இதுவரை 29 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளது.

இதே காலக்கட்டத்தில் இந்திய அணி 57 போட்டிகளில் விளையாடியுள்ளது.

பாகிஸ்தான் அணி விளையாடி உள்ள 29 போட்டிகளில் 12 போட்டிகள் இந்த ஆண்டில் விளையாடப்பட்டவை.

இதனிடையே போட்டியானது கண்டியில் உள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதால் தற்போது நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலை காரணமாக இந்த போட்டியில் அதிகளவு தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Join Our WhatsApp Group