அழகான கையெழுத்தால் பாராட்டு பெற்ற சிறுமி

59

மாணவ-மாணவிகளின் கையெழுத்து அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்ணை பெற்றுத் தரும் என்பார்கள். அந்த வகையில் நேபாளத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணின் கையெழுத்து உலகிலேயே மிகவும் அழகான கையெழுத்து என்ற பெருமையை பெற்று கொடுத்துள்ளது.பிரகிருதி மல்லா என்ற அந்த மாணவி தனது 14-ம் வயதில் 8-ம் வகுப்பு படிக்கும் போது எழுதிய கடிதத்தை பார்த்து பலரும் வியந்து போனார்கள். அந்த கையெழுத்தை பார்த்தால் கம்ப்யூட்டரே வெட்கப்படும் அளவிற்கு மிக அழகாக இருந்ததை கண்ட மக்கள் மாணவியை பாராட்டினர்.இந்நிலையில் மாணவி பிரகிருதி மல்லா ஐக்கிய அரபு எமிரேட்சில் 51-வது ஆண்டு ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வாழ்த்து கடிதம் எழுதினார். அவரது கடிதம் டுவிட்டரில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதைப்பார்த்த பயனர்கள் பலரும் ஆச்சர்யப்பட்டு மாணவியை பாராட்டி வருகின்றனர்.

Join Our WhatsApp Group