24 மணித்தியாலம் நடனமாடி உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மலையக இளைஞர்கள்

63

பெருந்தோட்ட சமூகத்தை சார்ந்த 7 இளைஞர்களும், இரு யுவதிகளும் 24 மணிநேரம் தொடர்ந்து நடனமாடி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.

லிந்துலை,மெரேயா,அக்கரபத்தனை, டயகம ஹப்புத்தளை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 முதல் 26 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர் யுவதிகளே இவ்வாறு சாதனை படைத்துள்ளனர்.

சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீநாகவானி ராஜாவின் மேற்பார்வையில் நேற்று காலை 8 மணிக்கு ஆரம்பமான நடனம் இன்று காலை 8 மணிவரையான 24 மணிநேரம் இடைவிடாது தொடர்ந்ததால் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இவர்கள் சாதனை படைத்தனர்.

Join Our WhatsApp Group