மருந்து இறக்குமதியாளர்களுக்கு 13 பில்லியன் ரூபா நிலுவை – சுகாதார அமைச்சு

54

மருந்து இறக்குமதியாளர்களுக்கு 13 பில்லியன் ரூபா நிலுவைத் தொகை செலுத்தப்பட வேண்டியுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தொகையினை செலுத்துவதற்கு திறைசேரியில் இருந்து நிதி கோரப்பட்டுள்ளதாகவும், குறித்து நிதியை கட்டம் கட்டமாக விடுவிப்பதற்கு திறைசேரி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலுவைத்தொகை செலுத்தப்படாமையினால் சில மருந்து இறக்குமதியாளர்கள் மருந்துகளை இறக்குமதி செய்வதில் தயக்கம் காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறை 161 ஆக குறைவடைந்துள்ளது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மருந்து கொள்வனவுக்கான முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அடுத்து வரும் சில வாரங்களில் பகுதி பகுதியாக மருந்துகள் இலங்கையை வந்தடையுமென சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளது

Join Our WhatsApp Group