பிரபல மலையாள நடிகை மர்ம மரணம்

47

நடிகை அபர்ணா நாயர் கடந்த 2005-ம் ஆண்டு மாயூகம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தமிழில் எதுவும் நடக்கும் என்ற படத்திலும், தெலுங்கில் சின்னி சின்ன ஆசா திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
கேரள மாநிலம் மலப்புரம் தென்ஹிபாலம் பகுதியை சேர்ந்த நடிகை அபர்ணா நாயர் (வயது31). இவர் மலையாளத்தில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.

பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், மாடலிங் துறையில் இருந்துவந்தார். கடந்த 2005-ம் ஆண்டு மாயூகம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்பு அடுத்தடுத்த ஆண்டுகளில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

நோட்புக், நிவேத்யம், மேகதீர்த்தம், எதுவும் நடக்கும், காக்டெய்ல், மேமா நிலவு, காயம், அழகு, ரன் பேபி ரன், ஒரு குட்டி சோத்யம், அமைதி, நொடிகள், தெருவிளக்கு, பாலன் வக்கீல், கல்கி, தாமர, ஒருத்தி, உணர்தல் உள்ளிட்ட ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார்.

தற்சமயம் திருவனந்தபுரம் கரமனாதலா பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் நடிகை அபர்ணா நாயர் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதனைப்பார்த்த அவரது தாய் மற்றும் சகோதரி அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு நடிகையை கொண்டு சென்றனர். அங்கு நடிகையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Join Our WhatsApp Group