சீனாவில் ஆகக் கடுமையான சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்படலாம்

34

சீனாவின் தெற்குப் பகுதியில் வலுவான சௌலா (Saola)சூறாவளி வீசியிருக்கிறது.ஹாங்காங் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருப்பதால்ஆகக் கடுமையான சூறாவளி எச்சரிக்கையை விடுக்க வானிலை அதிகாரிகள் பரிசீலிக்கின்றனர்.ஷென்ஸெனில் (Shenzhen) வர்த்தகங்கள் மூடப்பட்டதோடு கட்டுமானப் பணிகளும் நிலுவையில் உள்ளன.

வெள்ளத்தைத் தவிர்க்க, மணல் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.ஹாங்காங்கின் விக்டோரியா (Victoria) துறைமுகத்தில் மோசமான வெள்ளம் ஏற்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாலர்பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளிகள் வரை மூடப்பட்டுள்ளன.

சில ரயில் சேவைகள் ரத்துசெய்யப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.360க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டதாகவும் இன்னும் 40 சேவைகள் தாமதமாகிவிட்டதாகவும் ஹாங்காங்கின் விமானத்துறை தெரிவித்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களிலிருந்து 100,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.1,400க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் 300 தீயணைப்பாளர்களும் தேடல் பணிகளிலும் நிவாரண நடவடிக்கையிலும் உதவத் தயார்நிலையில் உள்ளனர்.

Join Our WhatsApp Group