சீனாவின் அண்மை வரைபடத்தை நிராகரித்த மலேசியா

27

தென்சீனக் கடற்பகுதியில் சீனா கோரும் உரிமைகளை அங்கீகரிக்கப்போவதில்லை என்று மலேசியா தெரிவித்துள்ளது. சீனாவின் அண்மை வரைபடத்தைக் குறிப்பிட்டு மலேசிய வெளியுறவு அமைச்சு அவ்வாறு கூறியது. மலேசியாவின் கடற்பகுதிகளையும் அந்த வரைபடம் உள்ளடக்கியிருந்தது.

அது மலேசியாவைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை என்று அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது. மலேசியாவின் 1979ஆம் ஆண்டு புதிய வரைபடத்தின்படி, சபா, சரவாக் வட்டாரங்களின் சில பகுதிகளைச் சீனா உரிமை கோரியிருக்கிறது.

தென் சீனக் கடல் விவகாரம் சிக்கலானது என்று மலேசிய வெளியுறவு அமைச்சு சொன்னது.சீனா இவ்வாண்டுக்கான அதன் வரைபடத்தைக் கடந்த திங்கட்கிழமை வெளியிட்டது.அதில் மலேசியாவின் சபா, சரவாக், புருணை, பிலிப்பீல்ஸ், இந்தோனேசியா, வியட்நாமின் சிறப்புப் பொருளியல் வட்டாரங்களும் அடங்கியிருந்தன.இந்தியாவின் சில பகுதிகளும் அதில் இடம்பெற்றிருந்தன.

Join Our WhatsApp Group