சினோபெக் லங்கா எரிபொருள் நிறுவனம் புதிய விலைகளிலும் 3 ரூபாய் குறைவு

73

சினோபெக் லங்கா நிறுவனம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் சில்லறை விற்பனை விலையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சினோபெக் சில்லறை விற்பனையில் பெட்ரோல் 92 லீற்றரின் விலை ரூ.358 ஆகவும், பெற்றோல் 95 இன் விலை ரூ.414 ஆகவும், லங்கா ஆட்டோ டீசல் ஒரு லிட்டர் ரூ. 338, லங்கா சுப்பர் டீசல் ரூ.356 ஆகவும், மண்ணெண்ணெய் லீற்றரின் சில்லறை விலை ரூ.231 ஆகவும் இருக்கும்.

இந்த விலையானது நாட்டில் உள்ள அனைத்து சினோபெக் உரிமையாளர் நிரப்பு நிலையங்களுக்கும் பொருந்தும் மற்றும் சினோபெக் லங்காவால் வெளியிடப்படும் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை செல்லுபடியாகும்.

Join Our WhatsApp Group