சினோபெக் எரிபொருள் விலையில் மாற்றமில்லை

65

நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் மற்றும் லங்கன் இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளன.

எவ்வாறாயினும், நேற்று இலங்கையில் புதிய செயற்பாடுகளை ஆரம்பித்த சினோபெக் நிறுவனம், எரிபொருள் விலையை திருத்துவது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சினோபெக் நிறுவனம் கடந்த 30ஆம் திகதி தனது செயற்பாடுகளை ஆரம்பித்ததுடன், சிபெட்கோ மற்றும் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விலையை விட 03 ரூபா குறைவாக சினோபெக் எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஊடாக எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என சுட்டிக்காட்டியுள்ளது.

Join Our WhatsApp Group