களுத்துறை, கேகாலை இரத்தினபுரி: மழைக்கால நிலை- 03 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

55

இலங்கையில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, புலத்சிங்கள மற்றும் இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இன்று இரவு 8:00 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட மற்றும் குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்களும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாறைகள் சரிவுகள் மற்றும் மண்சரிவுகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group