இலட்சக்கணக்கு பெறுமதியான திமிங்கலத்தின் வாந்தி பிடிபட்டது

40

கம்பஹா, நெதகமுவ பிரதேசத்தில் 646 கிராம் எடையுள்ள அம்பர் எனப்படும் பாதுகாக்கப்பட்ட கடல் திமிங்கல வாந்தியின் 3 துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை வைத்திருந்த ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய் உட்பட மூவர் நெதகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நெதகமுவ பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும், 48 வயதுடைய ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரும், கலகெடிஹேனையைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அதிக பெறுமதியான அம்பர் விற்பனைக்கு இருப்பதாக மேல் மாகாண புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கம்பஹா பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த மூவரிடமும் கைப்பற்றப்பட்ட அம்பர் 80 லட்சம் ரூபாய் பெறுமதியானதென மதிப்பிடப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group