இறக்குமதி தடை அமுலில் : 6900 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசு அனுமதி

54

இலங்கையில் தற்போது வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் விசேட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் 6900 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 3000 இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அவை ஜீப்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை உள்ளடக்கியதாக தெரிவித்தார்.

வாகன இறக்குமதி தடையை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த அவர், வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கான தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் வாகனங்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் 5000க்கும் அதிகமான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யட்டியாந்தோட்டையில் புதன்கிழமை (ஆக. 30) செய்தியாளர்களிடம் பேசும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.

Join Our WhatsApp Group