இந்த அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் -எதிர்க்கட்சித் தலைவர்

60

இந்நாட்டில் தற்போது ஆபத்தில் உள்ள மக்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கமும், சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களமும் முறையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றாலும் அவ்வாறான கணக்கெடுப்பை மேற்கொள்ளவில்லை என்றும்,எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகள் சபையின் UNDP மற்றும் Oxford பல்கலைக்கழகத்தினால் இவ்வாறான கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முறையான கணக்கெடுப்பு இல்லாமல் எந்த சமூகப் பாதுகாப்புத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என்றும்,தற்போதைய அரசாங்கம் அஸ்வெசும போன்ற திட்டங்களைக் கூட முறையாகக் கணக்கெடுக்காமல் நடைமுறைப்படுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதனால்,சமூகத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டு,கவனிப்பார் அற்ற மக்களிடையே தகராறுகள் கூட ஏற்பட்டுள்ளன என்றும், இதனால் சமூகத்தில் குழப்ப நிலை தோன்றியுள்ளதுடன் அஸ்வெசும வேலைத்திட்டம் நாட்டை துண்டு துண்டாக பிரிக்கும் குழப்பிய திட்டமாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமும் Oxford பல்கலைக்கழகமும் இணைந்து எமது நாடு தொடர்பில் மேற்கொண்ட Understanding Multidimensional Vulnerability Impact on People of Sri Lanka என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையை அதனை நடத்தியவர்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிப்பதற்காக வந்த போதே எதிர்க்கட்சித் தலைவர் நேற்று (31) இவ்வாறு தெரிவித்தார்.

வறுமைக்கு தீர்வாக அஸ்வெசும திட்டம் அமுல்படுத்தப்பட்டாலும்,அது தெளிவானதொரு தீர்வாக காணப்படாததால் நாட்டில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வங்குரோத்து நாட்டில் அரசாங்கம் திருட்டு,ஊழல் மோசடிளை செய்து வருவதாகவும்,தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் கூட நாட்டுக்கு தரம் குறைந்த மருந்துகள் கொண்டு வரப்பட்டதை ஒப்புக்கொண்டார் என்றும்,அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தி தரக்குறைவான மருந்துகளை நாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போதே ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் வாய் திறந்தார் என்றும், இதுவரை ஏன் அமைதியாக இருந்தார் என்று கேள்வி எழுப்புவதாகவும், ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்கமும் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில்,ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி Ms Azusa Kubota,Dr Sabina Alkire (Director -Oxford Poverty and Human Development Initiative (OPHI),University of Oxford), சமூகவியல் துறைப் பேராசிரியர் சிறி ஹெட்டிகே,Mr.Fadhil Bakeer Markar ( Team Leader, UNDP) மற்றும் Ms.Tshokey Zangmo, Researcher, (OPHI) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு திட்டமாக,பல் பரிமாண இடர் குறிகாட்டிகளை அடையாளம் காணும் திட்டம் நம் நாட்டிற்கு இன்றியமையாத திட்டமாகும் என்றும், குறிப்பாக நம் நாட்டில் ஆபத்தில் உள்ளவர்கள்,கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்கள்,நோய்வாய்ப்பட்டவர்கள், காலநிலை மாற்றம் காரணமாக கல்வி கற்க முடியாதவர்கள், வறுமையால் ஆபத்தில் உள்ளவர்கள் போன்றோர் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும், அரச கொள்கைகளை வகுக்க இதனைப் பயன்படுத்த முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Join Our WhatsApp Group