வாகன ஓட்டிகள் கழுத்தில் ஹெட்செட் அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

38
  • போலீசாரின் அறிக்கையை பரிசீலனை செய்த மாநில அரசு போன் ஹெட்செட் மாட்டி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்தனர்.
  • கட்டுப்பாடு காரணமாக இனி வாகனங்களில் செல்பவர்கள் ஸ்டைலாக ஹெட்செட் மாட்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பதி:

வாகனங்களில் செல்பவர்கள் தற்போது ஹெட்செட், இயர்போன் போன்றவற்றை கழுத்தில் அணிந்தபடி அதிகளவில் செல்கின்றனர். மேலும் வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசிய படியும், கழுத்தில் போன் ஹெட் செட் மாட்டி பேசியபடி செல்லும்போது கவனம் சிதறி விபத்தில் சிக்குகின்றனர்.

ஆந்திராவில் போன் ஹெட்செட் மாட்டி செல்வதால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதாக போலீசார் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் மாநில அரசுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். அதன்படி இயர் போன், போன் ஹெட் மாட்டி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை அதிகமாக விதிக்க வேண்டும்.

இதன்மூலம் விபத்துக்களை குறைக்க முடியும் என தெரிவித்து இருந்தனர். போலீசாரின் அறிக்கையை பரிசீலனை செய்த மாநில அரசு போன் ஹெட்செட் மாட்டி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்தனர்.

வரும் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் கார், பைக், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் கழுத்தில் போன் ஹெட்செட், இயர் போன் மாட்டி பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினாலோ அல்லது கழுத்தில் போன் ஹெட்செட் மாட்டி இருந்தாலும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை அமலுக்கு வந்த பிறகு விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கட்டுப்பாடு காரணமாக இனி வாகனங்களில் செல்பவர்கள் ஸ்டைலாக ஹெட்செட் மாட்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group