“தேர்தல் இல்லாமல் 13 பற்றி பேசுவதில் அர்த்தமில்லை” – நாமல் ராஜபக்ஷ….

17

13வது திருத்தம் பற்றி பேசுவதற்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் முதலில் கலந்துரையாடுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியிருந்தார்.

“.. கலந்துரையாடல் தொடர்கின்றது. கட்சி என்ற முறையில் எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியின் நிலைப்பாட்டினை தெரிவித்தார். அது குறித்து எதிர்வரும் காலங்களில் பதிலளிக்கப்படும் எனும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இன்று 13 குறித்து பெரிதாக கதைக்கவில்லை. பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடுகையில் 13 குறித்தும் பேசப்பட்டது. மாகாண சபை, பிரதேச சபை இரண்டினையும் வைத்துக் கொண்டு 13 குறித்து பேசுவது தான் யதார்த்தம். அதனால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டும்..”

Join Our WhatsApp Group