ஜனாதிபதியின் பதிலை ஏற்க முடியாது – கலந்துரையாடல் தோல்வி

14

ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் முற்றாக தோல்வியடைந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலுக்கு தமது குழுவினர் சந்தேகங்களுடனேயே வந்ததாக அவர் சுட்டிக்காட்டியதோடு, அந்த சந்தேகத்தை ஜனாதிபதி நிரூப்பித்துவிட்டார் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், தேர்தல் குறித்து ஜனாதிபதி பேசும் போது அவர் பயந்த சுபாவத்துடன் இருந்ததாகவும், அவர் பேசியவுடன் கலந்துரையாடல் முடிக்கப்பட்டு அவர் எழுந்து சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.

Join Our WhatsApp Group