இலங்கைக்கு செல்லும் தமது பிரஜைகளுக்கான வெளிநாட்டு பயண ஆலோசனைகளை பிரித்தானியா புதுப்பித்துள்ளது.ஆகவே இலங்கைக்கு பயணம் செய்வதற்கு முன், இலங்கையின் தற்போதைய நுழைவு கட்டுப்பாடுகள் மற்றும் நுழைவுத் தேவையுள்ள பகுதியைச் சரிபார்க்குமாறு பிரித்தானிய அரசாங்கம் வெளிட்டுள்ள அறிவுறுத்தலில் கோரப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார சிக்கல் நிலை காரணமாக எரிபொருள், போக்குவரத்து, வணிகம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களை தவிர்க்குமாறும், இந்த பயண ஆலோசனை மற்றும் உள்ளுர் ஊடகங்கள் மூலம் முன்னேற்றங்களை அவதானிக்க வேண்டும் எனவும் பிரித்தானிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.