(27.07.2023) இன்றைய ராசி பலன்கள்

19

மேஷம்

எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்கள் வழியில் உதவி கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணியில் அமைதியான சூழல் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.

 • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
 • அதிர்ஷ்ட எண் : 9
 • அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
 • அஸ்வினி : உதவி கிடைக்கும்.
 • பரணி : ஆதாயம் உண்டாகும்.
 • கிருத்திகை : அமைதியான நாள்.

ரிஷபம்

தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். மறைமுகமான சில போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். மனதை உறுத்திய சில கவலைகள் விலகும். சுகம் நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
 • அதிர்ஷ்ட எண் : 1
 • அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
 • கிருத்திகை : நெருக்கடிகள் குறையும்.
 • ரோகிணி : முதலீடுகள் அதிகரிக்கும்.
 • மிருகசீரிஷம் : கவலைகள் விலகும்.

மிதுனம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் திடீர் சந்திப்பு ஏற்படும். வியாபார இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். கலை சார்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
 • அதிர்ஷ்ட எண் : 8
 • அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
 • மிருகசீரிஷம் : ஆசைகள் நிறைவேறும்.
 • திருவாதிரை : சந்திப்பு ஏற்படும்.
 • புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.

கடகம்

எதிர்பாராத சில வேலைகள் முடிவு பெறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் ஏற்படும். அலுவலகப் பணிகளில் அமைதி உண்டாகும். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். தாய் வழி உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணி நிமிர்த்தமான ஆலோசனைகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.

 • அதிர்ஷ்ட திசை : வடக்கு
 • அதிர்ஷ்ட எண் : 1
 • அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
 • புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
 • பூசம் : ஆர்வம் ஏற்படும்.
 • ஆயில்யம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

சிம்மம்

நவீன தொழில்நுட்ப கருவிகளை வாங்குவீர்கள். வியாபாரத்தில் தவறிய சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகப் பணிகளில் திருப்தி உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். பூர்வீக சொத்துப் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர் வகையில் நன்மை ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு
 • அதிர்ஷ்ட எண் : 3
 • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
 • மகம் : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
 • பூரம் : தீர்வு கிடைக்கும்.
 • உத்திரம் : நன்மை ஏற்படும்.

கன்னி

கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் புரிதல் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். நிதானமான பேச்சுக்கள் நன்மையை ஏற்படுத்தும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களின் வருகை ஏற்படும். திடீர் மாற்றங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : மேற்கு
 • அதிர்ஷ்ட எண் : 9
 • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
 • உத்திரம் : புரிதல் அதிகரிக்கும்.
 • அஸ்தம் : ஒத்துழைப்புகள் ஏற்படும்.
 • சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்

தோற்றப் பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை தவிர்க்கவும். தலைவலி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உங்கள் மீதான சில விமர்சனங்கள் மறையும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து செயல்படவும். வரவு நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
 • அதிர்ஷ்ட எண் : 4
 • அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
 • சித்திரை : மாற்றங்கள் ஏற்படும்.
 • சுவாதி : கவனம் வேண்டும்.
 • விசாகம் : விமர்சனங்கள் மறையும்.

விருச்சிகம்

எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். நெருக்கமானவர்களை பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். குழந்தைகளை அரவணைத்து செல்வது நல்லது. பணிவான பேச்சுக்கள் தேவையற்ற பகைமையை தவிர்க்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மறதி நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : வடக்கு
 • அதிர்ஷ்ட எண் : 2
 • அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
 • விசாகம் : அலைச்சல்கள் ஏற்படும்.
 • அனுஷம் : வீண் பேச்சுக்களை தவிர்க்கவும்.
 • கேட்டை : அனுசரித்துச் செல்லவும்.

தனுசு

அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படும். வித்தியாசமான ஆசைகள் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் கைகூடும். தெளிவு பிறக்கும் நாள்.

 • அதிர்ஷ்ட திசை : மேற்கு
 • அதிர்ஷ்ட எண் : 7
 • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
 • மூலம் : ஆசைகள் பிறக்கும்.
 • பூராடம் : லாபம் மேம்படும்.
 • உத்திராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.

மகரம்

மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மறதிகள் விலகும். மனதில் எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். உறவினர்களின் வழியில் சுபிட்சம் ஏற்படும். புதிய முயற்சிகளால் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும். சிக்கல் குறையும் நாள்.

 • அதிர்ஷ்ட திசை : வடக்கு
 • அதிர்ஷ்ட எண் : 1
 • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
 • உத்திராடம் : மறதிகள் விலகும்.
 • திருவோணம் : சுபிட்சம் ஏற்படும்.
 • அவிட்டம் : கௌரவம் அதிகரிக்கும்.

கும்பம்

செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். நலம் நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
 • அதிர்ஷ்ட எண் : 9
 • அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
 • அவிட்டம் : சோர்வு குறையும்.
 • சதயம் : உதவிகள் சாதகமாகும்.
 • பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.

மீனம்

பழைய சிந்தனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய நபர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். தனவரவுகளில் இழுபறியான சூழல் அமையும். செய்யும் காரியங்களில் கவனம் வேண்டும். அரசு காரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். ஆர்வம் மேம்படும் நாள்.

 • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
 • அதிர்ஷ்ட எண் : 4
 • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
 • பூரட்டாதி : குழப்பமான நாள்.
 • உத்திரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.
 • ரேவதி : அலைச்சல்கள் ஏற்படும்.
Join Our WhatsApp Group