நடிகர் அஜித்குமார் சென்னை விமான நிலையத்திற்கு சென்ற காணொளிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இயக்குநர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தை ஆரம்பிக்கும் அனைத்து பணிகளை தயார் செய்து முடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒகஸ்ட் 17ம் திகதி சென்னையில் முதல் கட்டப்படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளது.
மேலும், படத்தின் படப்பிடிப்புகளை வெறும் 3 மாதத்துக்குள் முடிக்கும் அளவுக்கு பணிகள் அனைத்தும் முடிந்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் காணொளிகள் #VidaaMuyarachi என்ற ஹாஷ்டேக்குகளுடன் வைரலாக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, நடிகர் அஜித்குமார் வெளிநாட்டில் சுற்றுலா செய்து வந்த நிலையில், அவர் எப்போது சென்னைக்கு திரும்புவார் என்றும், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், அஜித் சென்னை திரும்பிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.