வவுனியா, தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் நிகழ்வு வீடொன்றில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் பலத்த காயமடைந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
தீக்காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர், மேலதிக சிகிச்சைக்காக அவரது உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 23 ஆம் திகதி பிறந்தநாள் விழா நடைபெற்ற வீடொன்றுக்குள் புகுந்த 8 பேர் அங்கிருந்தவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கியதுடன் குறித்த வீட்டுக்கு தீ வைத்ததில் 22 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்திருந்த பெண்ணின் கணவரே இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.