–
இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.பிரதான எதிர்க் கட்சிகளான இந்திரா காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி எம்பிக்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.சுமார் 52 எம்பிக்கள் கையழுத்திட்டாலே நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரால் பாரமேற்கப்படும்.
பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியிலுள்ள மணிப்பூர் மாநிலத்தில், மே மாதம் ஆரம்பமான சமூக மோதல்கள் 140 பேரை பலியெடுத்து, 60,000 பேரை இடம்பெயரச் செய்துள்ளது.மோதல்களை கட்டுப்படுத்த தவறினார் என்ற குற்றச்சாட்டு, மோடி மீது சுமத்தப்பட்டுள்ளது. இது, ஏனைய மாநிலங்களிலும் தாக்கம் செலுத்தியுள்ளது.
542 எம்பிக்களுள்ள இந்திய பாராளுமன்றத்தில் 301 பேர், பாரதீய ஜனதா கட்சியினர்.பிரேரணை குறித்த வாக்கெடுப்புத் தினம் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.32 இலட்சம் மக்கள் மணிப்பூரில் வாழ்கின்றனர். அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,இப்பிரேரணை பின்னர் பயன்படலாமென எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.