மட்டு. தாந்தமலை குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

17

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு தாந்தமலை முருகன் ஆலய வழிபாட்டிற்கு சென்ற இளைஞன் ஒருவர் தாந்தாமலை குளத்தில் நீராடியபோது நீரில் மூழ்கிநிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இடைநடுவில் வீதியில் உயிரிழந்த சம்பம் இன்று புதன்கிழமை (26) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி எருவில் காளிகோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய மோகனசிங்கம் பிரகதீசன் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இதுபற்றி தெரியவருவதாவது

தாந்தாமலை முருகள் ஆலைய வருடாந்த திருவிழா ஆரம்பித்து இடம்பெற்றுவரும் நிலையில் சம்பவதினமான இன்று களுவாஞ்சிக்குடி எருவில் பிரதேச மக்களின் திருவிழாவையிட்டு அந்தபகுதி மக்கள் ஆலைய வழிபாட்டுக்கு சென்றனர்.

இதன்போது ஆலைய வழிபாட்டுக்கு சென்ற குறித்த இளைஞனும் அவரது நண்பர்களுமாக தாந்தாமலை குளத்தில் நீராடியய போது குறித்த இளைஞன் நீரிழ் முழுகியதையடுத்து அவரை நண்பர்கள் காப்பாற்றி மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்வண்டியில் கொண்டுசென்ற நிலையில் இடைநடுவே வீதியில் உயிரிழந்துள்ளார்.

இதில் உயிரிழந்தவரின் சடலம் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச் சோலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Join Our WhatsApp Group