பெளத்த விகாரையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து: சேதமடைந்த 115 அடி புத்தர் சிலை

24

சீனாவில் உள்ள கன்சு மாகாணம் ஷாந்தன் கவுண்டியில் பௌத்த விகாரையில் ஏற்பட்ட தீ விபத்தில் 115 அடி புத்தர் சிலை சேதம் அடைந்துள்ளது.

இதன்படி, கி.பி 425ம் ஆண்டு காலத்தை சேர்ந்த சிலை ஒன்றை பார்த்து இந்த புத்தர் சிலை வடிவமைக்கப்பட்டதாகவும், சிலையின் ஒரு பகுதி மட்டும் சேதமடைந்ததாகவும் எஞ்சிய பகுதி அப்பிடியே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகாரையின் கட்டமைப்புகள் தீயில் அழிந்து விட்டதாகவும், இருப்பினும் ஆலயத்தின் கலாச்சார நினைவிச் சின்னங்கள் சேதமடையாமல் இருப்பதாகவும் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.குறித்த தீ விபத்தில் உயிர் சேதம் இல்லை என்றும் விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Join Our WhatsApp Group