“புதிய காதலன்” ஹாலிவுட் நடிகருடன் விரைவில் திருமணம் – நடிகை எமி ஜாக்சன்

18

மதராசபட்டனம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன் 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அருண் விஜய்யுடன் மிஷன் சாப்டர் 1: அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜூடனை காதலித்து வந்தார். திருமணம் ஆகாமலேயே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்பு கருத்து வேறுபாட்டால் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. தனது மகன் ஆண்ட்ரியாசுடன் தனியாக வாழ்ந்து வந்த எமி ஜாக்சன் தற்போது நடிகர் எட்வெஸ்ட் விக்கை காதலித்து வருகிறார்.

இருவரும் ஜாலியாக ஆங்காங்கே சுற்றி திரியும் படங்களை அவ்வப்போது எமி ஜாக்சன் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் ராஜஸ்தான் உதய்ப்பூருக்கு காதலருடன் சென்ற எமி ஜாக்சன் அங்கு ஓட்டலில் தங்கி காதலருடன் இருப்பதையும், மசாஜ் சென்டர் மற்றும் ரெஸ்டாரண்டில் அமர்ந்து சாப்பிடும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

அத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில் “எட்வெஸ்ட் விக் என் உணர்வுகளுடன் இணைந்தவர். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறோம். நான் நடித்துள்ள தமிழ் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. என் மகன் உலகை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக படப்பிடிப்புக்கு அழைத்து சென்றேன்” என்று கூறினார்.

Join Our WhatsApp Group