கெரட், போஞ்சி விலை தொடர்ந்தும் அதிகரிப்பு

17

சந்தையில் கேரட் மற்றும் போஞ்சி ஆகியவற்றின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக பொருளாதார நிலையங்களிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.

பேலியகொட மெனிங் சந்தையில் நேற்று ஒரு கிலோ போஞ்சி மொத்த விற்பனை விலை 300 முதல் 350 ரூபா வரையிலும், மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் 400 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது.

பேலியகொட, தம்புள்ளை, மீகொட மற்றும் நுவரெலியா ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களில் கேரட்டின் மொத்த விலை 400 முதல் 470 ரூபா வரை பதிவாகியுள்ளது.

இருப்பினும், லீக்ஸ் விலையில் சிறிது குறைந்துள்ளது. பல பொருளாதார நிலையங்களில் பச்சை மிளகாயின் மொத்த விலை 500 ரூபாவை அண்மித்ததுடன், கெப்பிட்டிபொல பொருளாதார நிலையத்தில் 600 முதல் 650 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டது.

Join Our WhatsApp Group